பக்கம் எண் :

பக்கம் எண்:192

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
         
     40    பஞ்சி யுண்ட வஞ்செஞ் சீறடி
           ஒதுங்க விடினும் விதும்பும் வேண்டா
           வாயிலுள் வைத்த வண்ணச் சிவிகை
           ஏற னன்றெனக் கூறி வைத்தலின்
           மணங்கமழ் மார்பன் மாடப் பேரறை
     45    இருந்தன னாங்குப் பொருந்துபு பொருக்கெனக்
           கட்டளைச் சிவிகையுட் பட்டணைப் பொலிந்த
           பூம்பட மறையப் புக்கன னொடுங்க
 
             (இதுவுமது)
           40 - 47 : பஞ்சி.........ஒடுங்க
 
(பொழிப்புரை) நங் கோமகளின் அலத்தக மூட்டப்பட்ட
  அழகிய சிவந்த சிற்றடிகள் சிறிது நடக்கவிட்டாலும்
  துன்பத்தால் நடுங்கும். ஆதலால் நடத்தல் வேண்டா.
  வண்ணச் சிவிகையை வாயிலின்கண் சேரவைத்து அவள்
  அதன்கண் ஏறுதல் நன்று என்று வெளிப்படையாகக் கூறிச்
  சிவிகையையும் அவ்வாறே வைத்தலால் குறிப்புணர்ந்த
  உதயணகுமரன் மாடத்தின்கண் பெரியதோர் அறையின்கண்
  இருந்தவன் அப்பொழுது ஞெரேலென்று தலை அளவுடைய
  அந்தச் சிவிகையினுட் புகுந்து பட்டால் மூடிய அணையைச்
  சுற்றிப் பொலிவுற்றிருந்த பூத்தொழிலமைந்த திரையினூடே
  மறைந்துறையா நிற்ப என்க,.
 
(விளக்கம்) பஞ்சி-செம்பஞ்சுக் குழம்பு. ஒதுங்கவிடினும் -
  நடக்கவிட்டாலும் மணங்கமழ் மார்பன்-உதயணன். கட்டளை -
  அளவு. பட்டணை-பட்டாலியன்ற அணைகள், பூம்படம் -
  பூத்தொழிலமைந்த திரை.