பக்கம் எண் :

பக்கம் எண்:195

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
           கருங்கடை மழைக்கட் கனங்குழைப் பாவை
           முடித்த நோன்பி னெடித்தவகை யறியார்
           இருளின் குற்றங் காட்டி நங்கை தன்
     70    உரிமையுள் படுநரைக் கழறுவன ராகி
           முழுநிலைக் கதவ மகற்றிமுன் னின்று
           தொழுத கையர் புகுதுகென் றேத்த
 
              (இதுவுமது)
           65 - 72 ; படியணி ,,,,,.,.. ஏத்த
 
(பொழிப்புரை) படிகள் அழகு செய்யும் அரண்மனை
  வாயிலைக் காவல் செய்வோர், தம் பெருமானுடைய
  தங்கையும் கரிய கடைப் பகுதியையுடைய குளிர்ந்த
  கண்ணையுடையவளும், கனவிய குழையை உடையவளும்,
  திருமகளை ஒத்தவளுமாகிய பதுமாபதி அற்றைநாள் நோன்பு
  முடித்தமையால் காலம் தாழ்த்தமையை அறியாதாராய் இருளினால்
  வருங் குற்றங்களை எடுத்துக்காட்டிப் பதுமாபதியினுடைய உவளகப்
  பணியாளரை இடித்துரைத்துத் தலையளவுடைய நிலையினையுடைய
  கதவினை நன்கு திறந்து வைத்துத் தாமே முன்னின்று கைகூப்பித்
  தொழுதவராய் எங்கோமகள் புகுதுக! புகுதுக!, என்று ஏத்தா
  நிற்ப; என்க.
 
(விளக்கம்) படி - படிக்கட்டுகள். பெருங்கடை -
  அரண்மனை வாயில். பாவை-பதுமாபதி. நோன்பு
  முடித்தமையின் என்க. நெடித்தவகை - காலம் தாழ்த்தமுறை.
  இருளின் குற்றம் - இருட்காலத்தே நிகழும் துன்பங்கள்,
  உரிமையுள் படுநர் - உவளகப்பணி மாக்கள். கழறுவனர்
  ஆகி - இடித்துரைப்பாராகி,