பக்கம் எண் :

பக்கம் எண்:197

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
           தன்னகர் குறுகித் துன்னிய மகளிரை
           அகல்க யாவிரு மழலு மெனக்கெனத்
           திலக முகத்தி திருந்துபடந் திறந்து
           கூன்மகள் வீச வானா வகத்தே
     85    தக்க வெல்லை யிருத்தலின் மிக்க
 
             (இதுவுமது)
           81-85 : துன்னிய,,,,,,,,.இருத்தலின
 
(பொழிப்புரை) அவ்விடத்தே தன்னைச் சூழ்ந்த
  தோழிமார்களை நோக்கி ''என் உடல் வெம்புகின்றது.
  எல்லீரும் அகலப்போமின் என்று கூறிததிலகமிட்ட
  முகத்தையுடைய அப்பதுமாபதி திரையைத் திறந்து அயிராபதி
  சாமரை வீசா நிற்ப அம்மகளிர் அகலுந் துணையும்
  தகுந்த இடத்தே இருத்தலால்; என்க,
 
(விளக்கம்) அழலும்-வெம்பும்  திருந்து படம் -
  திருத்தமுடைய திரை திலகமுகத்தி - பதுமாபதி.
  கூன்மகள்-அயிராபதி