பக்கம் எண் :

பக்கம் எண்:199

உரை
 
3. மகத காண்டம்
 
13. கோயில் ஒடுங்கியது
 
           பேரிமை யண்ணலும் பெருநல மாதரும்
           ஆரிருள் போர்வை யாக யாவரும்
           அறிதற் கரிய மறையரும் புணர்ச்சியொடு
           கரப்பறை யமைத்துக் கைபுனைந் தோர்க்கும்
     95    உரைக்க லாகா வுறுபொறிக் கூட்டத்துப்
           புதவணி கதவிற் பொன்னி்ரை மாலை
           மதலை மாடத்து மறைந்தொடுங் கினரென்
 
                    (இதுவுமது)
           91-97; பேரிமை,,.,,,,,,ஒடுங்கினரென்
 
(பொழிப்புரை) பெரும் புகழையுடைய உதயணமன்னனும்
  சிறந்த பெண்மை நலமுடைய பதுமாபதியும் காண்டற்கு
  அரிய இருளே தம்மைப் பிறர், அறியாமல் பேணும்
  போர்வையாக  அமைய எத்தகையோரும் அறிதற்கு
  அரிதாகிய களவு மணப்புணர்ச்சியோடு கரப்பறை அமைத்துக்
  கொண்டு செய்தவர்கட்கும் சொல்லிக் காட்ட இயலாத மிக்க
  வியந்திரச் சேர்க்கையையுடைய வாயிலை அழகு செய்கின்ற
  கதவினையுடைய பொன்மாலை நிரல்படத் தொடுத்த மதலை
  மாடத்தினூடே பிறர் தம்மை உணராதபடி மறைந்து இருந்தார்கள்;
  என்க,
 
(விளக்கம்) அண்ணல் - உதயணன். மாதர் - பதுமாபதி.
  இருளில் பிறர் அறியாதபடி சென்றார் என்றபடி. மறையரும்
  புணர்ச்சி - களவுமணம். கரப்பறை - பிறர் அறியாதபடி மறைந்
  திருக்கும் அறை.பொறிக் கூட்டம் - எந்திரச் சேர்க்கை. புதவு -
  வாயில். மதலை -கொடுங்கை.

                13. கோயில் ஒடுங்கியது முற்றிற்று.
     -----------------------------------------------------------------------