உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
மதலை
மாடத்து மடமொழி
மாதரொ
டுதயண குமர னொடுங்கிய
வுவகையன்
விண்ணுறை தேவரும் விழையும்
போகத்துப்
பெண்ணுறை யுலகம் பெற்றோன் போலவும் |
|
(உதயணன் நிலை) 1 - 4 :
மதலை.........போலவும் |
|
(பொழிப்புரை) இவ்வாறு
பதுமாபதியினது கன்னிமாடத்துள்ள மதலை மாடத்தின்கண் மடப்பமுடைய
மொழிகளையுடைய அப் பதுமாபதியுடன் மறைந்திருத்தலால் உண்டாகிய
பெருமகிழ்ச்சியையுடைய உதயணகுமரன் வானுலகத்தில் உறைகின்ற தேவர்களும்
விரும்புவதற்குக் காரணமான இன்ப நுகர்ச்சியினையுடைய பெண்ணுறை உலகம்
பெற்றவனைப் போலவும் என்க, |
|
(விளக்கம்) மடமொழிமாதர்-பதுமாபதி பெண்ணுறை உலகம்- பெண்கள் மட்டுமே நிறைந்துள்ள
மணித்தீவம். இதனை, 'பெண்ணுலகேய்ப்பக் கன்னி மகளிர்' (1...42 -
181 - 2) என முன்னும் கூறினமையால் உணர்க. |