உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்ச |
|
5
நோக்கருங் கதிரவ னீக்கம் பார்த்துப்
பைங்கதிர்
விரிக்கும் பனிமதிக்
கிழவன்
அங்கண் ஞாலத் தளவை
யாகிய
பன்னாட் பக்கஞ் செல்லாது
சின்னாள்
வெண்முக நிலாவொளி சுருங்க மெல்லென
10 உண்மகி ழுரோணியொ டொளித்தது
போலவும்
திகழ்மணி மார்ப னகநக
ரொடுங்கப்
பொருள்புரி யமைச்சர் புறநகர் கரப்புழி |
|
(இதுவுமது) 5 - 12 ;
நோக்கு..-.-....கரப்புழி |
|
(பொழிப்புரை) கண்ணால்
நோக்குதற்கரிய கதிரவன் விலகிய செவ்வி பார்த்துப் பசிய ஒளியைப்
பரப்பும் குளிர்ந்த திங்கட்கடவுள் அழகிய இடமமைந்த உலகத்திற்கு அளவைப்
பொருளாக அமைந்த பிற விண்மீன்களிடத்துச் செல்லாமல் ஒரு சிலநாள்
வெள்ளிய தன்னுடைய முகத்தினது நிலாவொளி சுருங்கும்படி மெல்ல மெல்லத்
தன்னுள் மகிழ்கின்ற உரோகிணி என்னும் விண்மீனோடு சென்று
மறைந்தாற் போலவும் விளங்குகின்ற மணியணி யணிந்த மார்பினையுடைய
உதயணகுமரன் கன்னி மாடத்தினூடே மறைந்துறையாநிற்பப் பொருளை ஈட்டுதற்குரிய
உருமண்ணுவா முதலிய அமைச்சர்கள் புறநகரத்தே மறைந்துறையுங்கால்
என்க, |
|
(விளக்கம்) பனிமதிக்
கிழவன் - திங்கள். பன்னாள் - பலவாகிய விண்மீன்கள். உரோணி -
உரோகிணி. மார்பன் - உதயணகுமரன். இவ்வுவமையோடு, ''மண்ணகங் காவலின்
வழுக்கி மன்னவன், பெண்ணருங் கலத்தொடு பிணைந்த பேரருள், விண்ணக மிருள்
கொள விளங்கு வெண்மதி, ஒண்ணிற உரோணியோ டொளித்த
தொத்ததே'' (சீவக- 198) என்பதனையும் ஒப்புக் காண்க. அமைச்சர்
-உருமண்ணுவா முதலியோர். |