உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
தவ்வை யாயினுந் தாயே
யாயினும்
செவ்வி யறியார் சென்றுமெய் சாரிற்
40 காட்டக் காணாள் கதம்பா
டேற்றி
வாட்கட் பாவை மருவற்
கின்னாக்
காட்சிய ளாகிக் கருதுவ தெதுவெனின் |
|
(பதுமாபதி செவ்வி
அரியளாதல்) 38
- 42 : தவ்வை.........எதுவெனின் |
|
(பொழிப்புரை) இனி வாள்போலுங்
கண்களையுடைய அப்பதுமாபதி தானும் தன்னுடைய செவிலி மக்களாகிய தமக்கையர்
ஆயினும் செவிலித் தாயே யாயினும் செவ்வியறியாமல் இயல்பாகவே
தன்பால்வரின் அவர் அறிவிக்கும் செய்திகளை ஏற்றுக்
கொள்ளாளாய் வெகுளி உடையாள் போன்று அவர்க்குத் தன்னைக் காட்டி, யாரும்
தன்னை அடைதற்கு இன்னாக்காட்சியளாகி, அவ்வுறவினர் நீ கருதுவதுதான் யாது
என்று வினவின்; என்க, |
|
(விளக்கம்) தவ்வை.
மூத்தவராகிய செவிலியின் பெண் மக்கள் தாய்-செவிலி; நற்றாயுமாம்.
காணாள்-ஏற்றுக்கொள்ளாள். இன்னாக்காட்சி - காண்போர்க்குத் துன்பம்
தரும் காட்சி. |