பக்கம் எண்:206
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 14. நலனாராய்ச்சி | |
வீயா நண்பின் வேத
மகளுழை
யாழும் பாட்டு மவைதுறை போகக் 45
கற்றல் வேண்டு மினியெனக்
கற்பதற்
கன்புடை யருண்மொழி யடைந்தோ
ருவப்ப
நன்பல பயிற்றிய நாவின
ளாகி
அமிழ்தி னன்ன வறுசுவை
யடிசிலும்
இவணே வருக வின்று முதலெனத் 50
தமர்வயி னேய தன்மைய ளாகி | | இதுவுமது 43 - 50 ;
வீயா,,,,,.,,,தன்மையளாகி | | (பொழிப்புரை) கெடாத
நண்பினையுடைய யாப்பியாயினியின் பால் யான் யாழும் மிடற்றுப் பாடலும்
ஆகிய அக்கலைகள் முற்றுப் பெறும்படி இனிக் கற்றல் வேண்டும் என்று தான்
கற்பதற்கு அன்புடைய அருள் மொழியை அவ்வுறவினர்கள் மகிழும்படி நன்குபல
படக் கூறிய நாவினை உடையளாய்ப் பின்னரும் அவ்வுறவினர்களை நோக்கி
எனக்கு அமிழ்தம் போன்ற அறுசுவை அடிசில் தானும் இன்று முதலாக
இவ்விடத்திற்கே வருமாறு செய்க என்று ஏவிய தன்மையை உடையளாகி;
என்க, | | (விளக்கம்) கற்பதற்கு
அன்பு-கற்பதற்கு விருப்பம். இவண் - இவ்விடம். தமர்-தவ்வை தாய்
முதலியோர். |
|
|