உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
உருவொடு புணர்ந்த வுயரணை மீமிசை
90 இருபுடை மருங்கினு மெழில்பட
விரீஇ ஏமச்
செவ்வி யேஎர்
நுகரும்
யாமத் தெல்லையுண் மாமறைப்
பேரறை உலாவு
முற்றத் தூழ்சென்
றாட
நிலாவிரி கதிர்மணி நின்று விளக்கலும்
95 பள்ளி தன்னுள் வள்ளிதழ்க்
கோதையொடு
மன்னய முரைத்து நன்னலங் கவர்ந்து |
|
(இதுவுமது) 89-96 :
உரு ......... கவர்ந்து |
|
(பொழிப்புரை) அழகோடு பொருந்திய
உயர்ந்த அணையின் மீது உதயணனும் பதுமாபதியும் எதிரெதிராக இரண்டு
பக்கங்களிலும் அழகுற அமர்ந்திருந்து இன்பமுடைய செவ்வியையுடைய அவ்விருவரும்
தம்முள் ஒருவர் அழகை ஒருவர் கூர்ந்து நோக்கி இன்பம் நுகர்ந்த பின்னர்
முதல் யாமத்தின்கண் அக்கரப்பறையின் உலாவுதற்குரிய முற்றத்தின்கண்
முறையே சென்று விளையாட பதுமாபதியினது மணி அணிகலன்களின் ஒளி பாய்ந்து
அவ்விடமெல்லாம் விளக்கம் செய்தபின் அப்பள்ளியின் கண் அம் மன்னவன்
அப் பதுமாபதியோடு நலம்பல பாராட்டி அவளது நலத்தை நுகர்ந்த
பின்னர்; என்க. |
|
(விளக்கம்) இரீஇ-இருந்து.
ஏமச் செவ்வி-இன்பம் நுகர்தற்குரிய பருவம். ஏர்-அழகு. கோதை - பதுமாபதி.
நய முரைத்தல்- நலம் பாராட்டுதல். |