பக்கம் எண் :

பக்கம் எண்:212

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           கைவளர் மாதர் கனன்றுகனன் றெழுதரும்
           காம வேகந் தான்மிகப் பெருகப்
     105    புலவி நெஞ்சமொடு கலவியுட் கலங்கிப்
           புல்லுகை நெகிழப் புணர்வுநனி வேண்டாள்
           மல்லிகைக் கோதை மறித்தன ளிருந்து
 
         (பதுமாபதி ஊடல்)
      103 -107 ; கை ..,......இருந்து
 
(பொழிப்புரை) பதுமாபதி மிக்கு வளர்கின்ற தனது நெஞ்சிற்கனன்று
  கனன்று எழுகின்ற காம வேகந்தான் மிக மிகப் பெருகுதலான்
  உதயணனோடு ஊடல் கொண்ட நெஞ்சுடையளாய் அவனோடு
  புணர்தலின்கண் கலக்க மெய்தி அவனைத் தழுவுதலில்
  கைநெகிழ்ந்து புணர்ச்சியினை வேண்டாளாய் மல்லிகை மலர்
  மாலை சூடிய அந்நங்கை மற்றொரு புறத்தே தன்முகத்தைத்
  திருப்பிக் கொண்டு துன்பத்தோடிருந்து, என்க.
 
(விளக்கம்) கை வளர்தல்-மிகுந்து வளர்தல.. புலவி-ஊடல்.
  கலவி -புணர்தல், புல்லுகை -தழுவுதல். மல்லிகைக் கோதை
  பதுமாபதி, மறித்தனள்-முகமாறி,