உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
சூட்டுமுகந்
திருத்தி வேட்டுநறு
நீரின்
மயிரு மிறகுஞ் செயிரறக் கழீஇக்
110 கோனெய் பூசித் தூய்மையு
ணிறீஇப்
பாலுஞ் சோறும் வாலிதி
னூட்டினும்
குப்பை கிளைப்பறாக் கோழி
போல்வர்
மக்க ளென்று மதியோ
ருரைத்ததைக்
கண்ணிற் கண்டே னென்று கைந்நெரித் |
|
(இதுவுமது) 108 -114;
சூட்டு.........என்று |
|
(பொழிப்புரை) கோழியானது தன்னை வளர்ப்போர் பெரிதும் விரும்பி அதன் தலையிலுள்ள
சூட்டினை அழகுறத் திருத்தி நன்னீரில் அதன் மயிரையும் இறகையும் அழுக்
ககலக் கழுவித் தூரியக் கோலால் நறு நெய்யைத் தடவித் தூய இடத்தில்
வைத்து நாடோறும் பாலுஞ் சோறும் தூயனவாக ஊட்டி, வளர்த்தாலும்
தனக்கியல்பான குப்பை சீக்கும் தொழிலை விடாது. அந்தக் கோழியை
ஒப்பாரும் மாந்தருட் சிலர் உளர், என்று அறிவுடையோர் கூறிய உண்மையை
இன்று யான் என் கண்ணாலேயே கண்டுணர்ந்தேன் என்று அவன் கேட்கும்படி கூறி,
என்க |
|
(விளக்கம்) சூட்டு-
தலையிலுள்ள கொண்டை, வேட்டு - விரும்பி கழீஇ - கழுவி.
கோல்-தூரியக்கோல்; எழுதுகோல். தூய்மை- தூய இடம். நிறீஇ-நிறுத்தி.
குப்பை கிளைப்பு-குப்பையைக் காலால் சீத்தல். இதனோடு, "கப்பி கடவதாக்
காலைத்தன் வாய்ப்பெயினும் குப்பை கிளைப்போவாக் கோழிபோல் "
(நாலடி - 341) என்னும் இவ்வடிகள் ஒப்பு நோக்கற் பாலன, |