பக்கம் எண் :

பக்கம் எண்:214

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
          
           கண்ணிற் கண்டே னென்று கைந்நெரித்
     115    தொண்ணுதன் மாத ருருகெழு சினத்தள்
           தம்மால் வந்த தாங்கரும் வெந்நோய்
           தம்மை நோவ தல்லது பிறரை
           என்னது நோவ லேத முடைத்தெனக்
 
          (இதுவுமது)
      114-118 ; கை ......... உடைத்தெனக்
 
(பொழிப்புரை) அந்நங்கை தன் கைகளை நெரித்து
  அச்சமுண்டாவதற்குக் காரணமான வெகுளியை உடையளாய்த் தனக்
  குள்ளே ஒருவர் தாமே தேடிக். கொண்ட ஒரு கொடுந்துன்பத்திற்குத்
  தம்மையே நொந்து கொள்வதல்லது பிறரை நோதல் மேலுந் துன்பம்
  தருவதொன்றாம் என்று கூறிக்கொண்டு என்க.
 
(விளக்கம்) கைந்நெரித்தல் - துன்பத்தின் மெய்ப்பாடு
  ஒண்ணுதல் மாதர் -பதுமாபதி. உரு -அச்சம், வெந்நோய்-வெப்பமுடைய
  நோய். என் நோவல் அது ஏதம் உடைத்து என்க.