| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 14. நலனாராய்ச்சி |
| |
கருங்கே
ழுண்கண் கயலெனப் பிறழ்ந்து 120
பெருங்கயத் தாமரைப் பெற்றிய
வாகத்
திருநுதல் வியர்ப்பெழுந் திருநிலத்
திழிதர
நிலாவுறு திருமுக நிரந்துடன்
மழுங்கிக்
கருமயி ரிவர்ந்து காண்டகக்
குலாஅய்ப்
புருவம் பலகால் புடைபுடை பெயர |
| |
(இதுவுமது)
119-124 ; கருங்கேழ் ......... பெயர |
| |
(பொழிப்புரை) கரிய நிறமமைந்த
மையுண்ட தன் கண்கள் கயல் மீன் பிறழ்வது போலப் பிறழ்ந்து பெரிய
குளத்தின்கண்ணுள்ள செந்தாமரை மலர் .போலச் சிவப்பாகவும், .அழகிய
நுதலின் கண் வியர்வை முகிழ்த்துப் பெரிய நிலத்தின்கண் வீழா நிற்பவும்
ஒளி பொருந்திய தனது அழகிய முகம் ஒரு சேர ஒளி மழுங்கித் தனது
கரிய புருவம் முரிந்து வளைந்து பன்முறை இடம் பெயரா நிற்பவும்,
என்க. |
| |
(விளக்கம்) உண்கண்-மையுண்டகண். தாமரை - ஈண்டுச்செந்தாமரை. வியர்ப்பு - வியர்வை.
நிலா-திங்களுமாம். புடை புடை - இடந்தொறும் இடந்தொறும். |