| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 14. நலனாராய்ச்சி |
| |
125 முத்துற ழாலி தத்துவன
தவழ்ந்து
பொன்னிறக் குரும்பை நன்னிற
மழுங்கத்
தன்னிறங் கரப்பத் தவாஅ
வெம்மையொடு
வீழனல் கடுப்ப வெய்துயிர்த்
தலைஇக்
காதல்செய் கலங்கள் போதொடு போக்கி
130 அந்தண் சாந்த மாகத்துத்
திமிர்ந்து
பண்புரை கிளவி பையெனத் திரியக் |
| |
(இதுவுமது)
125-131 : முத்து.........இரிய |
| |
(பொழிப்புரை) முத்துக்களை ஒத்த
கண்ணீர்த் துளிகள் உதிர்ந்து தவழ்தலாலே பொன்னிறக் குரும்பை போன்ற
முலைகள் நல்ல நிறம் மழுங்கவும் தனது திருமேனி நிறம் மறையவும் குறையாத
வெப்பத்தோடு வீழாநின்ற தீப்போன்று வெய்தாக உயிர்த்துத் தான்
அணிந்துள்ளவையும் தன்னால் பெரிதும் விரும்பப்படுவனவும் ஆகிய
அணிகலன்களையும் மலர் மாலைகளையும் குலைத்து எறிந்தும் மார்பின்கண்
பூசப்பட்ட அழகிய குளிர்ந்த சந்தனத்தையும் தேய்த்துதிர்த்துப் பண்ணை
ஒத்த மொழிகளையுடைய அப்பதுமாபதி நங்கை வேறுபடா நிற்க; என்க, |
| |
(விளக்கம்) ஆலி -
கண்ணீர்த் துளிகள். குரும்பை - முலை தவா-கெடாத. கலங்கள்-அணிகலன்கள்.
ஆகத்து - மார்பின்கண். பண்புரை கிளவி-பண்ணை ஒத்த மொழியையுடைய
பதுமாபதி. திரிய-வேறுபட.. |