| பக்கம் எண்:218
|
|
| உரை | | | | 3. மகத காண்டம் | | | | 14. நலனாராய்ச்சி | | |
சிறியோர்
செய்த சிறுமையுண்
டெனினும்
தரியாது விடாஅர் தாநனி
பெரியோர்
என்பது சொல்லி யெழில்வரை
மார்பன்
பொன்புனை பாவை புறக்குடை நீவிச்
145 செங்கையிற் றிருத்திப் பைந்தோ
டணிந்து
கலம்பல திருத்தி நலம்பா
ராட்டிச்
சாந்த மெழுகிச் சாயனெகிழ்
பறிந்து
பூம்புறங் கவவப் புனைதா
ரோதி பூண்ட
பூணொடு பொறையொன் றாற்றேன்
150 தீண்டன்மின் பெருமவெனத் தீரிய வுரைத்து | | | (இதுவுமது)
141-150 ; சிறியோர்,,.,..,..உரைத்து | | | (பொழிப்புரை) ''நங்காய்
சிறியோர் செய்த பிழையினை மிகவும் சான்றோர் பொறாமல் விடார்.' இம்
முதுமொழியைக் கூறி அழகிய மலை போன்ற மார்பினையுடைய அம்மன்னன்
பொன்னாலியன்ற பாவை போல்வாளாகிய அப்பதுமாபதியின் முதுகைத் தடவி அவளது
பசியதோட்டினைத் தன் சிவந்த கைகளாலே திருத்தி நன்கு அணிந்து
விட்டுப்- பிற அணிகலன்களையும் திருத்தியிட்டு அவள் அழகினைப்
பெரிதும் பாராட்டிச் சந்தனம் பூசி மென்மையுடைய அவள் நெஞ்சம்.
நெகிழ்தலை, உணர்ந்து அவளது முதுகினை அணைத்து அவள், பெருமானே!
யான் அணிந்துள்ள அணிகலன்களைச் சுமத்தலும் ஆற்றேன் என்னைத் தீண்டாதே
கொண்மின்'' என்று கூறுமளவிற்கு ஊடல் தீர்த்துப் பணி மொழி பல கூறா
நிற்ப, என்க. | | | (விளக்கம்) ''சிறியோர்
செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே'' எனவரும்
நறுந்தொகையும் நினைகதரியாது-பொறாமல். மார்பன்-உதயணன். பொன்புனை
பாவை-பொன்னாற் செய்யப்பட்ட பாவை, பதுமாபதி, புறக்குடை-முதுகு.
நீவி-தடவி. சாயல்-மென்மை. நெகிழ்பு-நெகிழ்தல். கவவ-அணைக்க. புனை
தாரோதி-பதுமாபதி. ஊடி இருந்தவள் அது தீர்ந்து தன்னோடு பேசுமளவிற்கு ஊடல்
தீர்த்து என்றவாறு, |
|
|