பக்கம் எண் :

பக்கம் எண்:220

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
          
          
           அச்ச முயக்க நச்சுவனன் விரும்பி
           மெல்லியன் மாதரொடு மேவன கிளந்து
     160    புல்லியுந் தளைத்தும் புணர்ந்தும் பொருந்தியும்
           அல்குலு மாகமு மாற்றநலம் புகழ்ந்தும்
           அமர ராக்கிய வமிழ்தெனக் கினையோள்
           தன்முளை யெயிற்றுநீர் தானென வயின்றும்
           ஒழுகா நின்ற காலை யொருநாள்
 
           (இதுவுமது)
       158-164 ; அச்சம்......,..ஒருநாள்
 
(பொழிப்புரை) இவ்வாறு பதுமாபதி தனது அச்சத்தினாலே 
  தழுவிக்கொண்ட; தழுவுதலைப் பெரிதும் அவாவுவானாய் விரும்பி 
  அவ்வுதயண மன்னன் மெல்லியல்புடைய -அந் நங்கையோடு .
  அச்  செவ்விக்கேற்ற இன்சொற்கள் பல கூறித் தானும் தழுவியும் 
  கட்டியும் புணர்ந்து பொருந்தியும் அவளது அல்குலும் மார்பும்
  பிறவுமாகிய உறுப்புக்களின் அழகினைப் பெரிதும் புகழ்ந்து கூறியும்
  இந் நங்கையின் நாணன்முளை போன்ற. வாலெயிற்றின் கண் ஊறுகின்ற
  நீர் எனக்கு அமரர் உண்டாக்கிய அமிழ்தம் ஆகும் என்று பாராட்டிப்
  பருகியும் இங்ஙனம் ஒழுகாநின்ற  காலத்தே ஒருநாள்; என்க,
 
(விளக்கம்) அச்ச. முயக்கம் - அச்சத்தால் தழுவும் தழுவல்; 
  மேவன -அச் செவ்விக்குப் பொருந்துவன. புல்லுதல் முதலியன; 
  கரண வகைகள். ஆற்ற -மிகவும். இனையோள்-இவள். முளையெயிறு 
  வினைத் தொகையுமாம்.