| பக்கம் எண்:221
|
|
| உரை | | | | 3. மகத காண்டம் | | | | 14. நலனாராய்ச்சி | | |
165 இன்பப் பேரறை நன்பகற்
பொருந்தி
அருமறை யறிதற் கமைந்த
வார்வத்
தொருதுணைத் தோழியை யொன்றுவனள்
கூவித்
திருவிற் கமைந்த தேந்தார்
மார்பன்
உருவிற் கமைந்த வுணர்வுநன் குடைமை
170 அளத்து நாமெனத் துளக்கிலள்
சூழ்ந்து
பலர்புகழ் மார்பன் பயின்ற
விச்சைகள்
வல்லவை யாய்கென வழிபா டாற்றி | | | (பதுமாபதி
தோழிக்குச்
சொல்லல்)
165-172; இன்ப,,,,,,,,,ஆய்கென | | | (பொழிப்புரை) இன்புறுவதற்குக்
காரணமான பெரியதோர் அறையின்கண் நல்ல பகற்காலத்திலே சென்றிருந்து
அறிதற்கரிய மறைச் செய்தியினை அறிந்து கோடற்குப் பொருந்திய
ஆர்வத்தையுடைய ஒப்பற்ற உசாத் துணைத் தோழியாகிய
யாப்பியாயினியுடன் கூடி ஆராயும் பொருட்டு அவளை அழைத்துத் திருமகள்
வீற்றிருத்தற்கு ஏற்ற இனிய மாலையணிந்த மார்பினையுடைய உதயணனது அழகுக்குப்
பொருந்திய கலையுணர்வு நன்குடை யனோ? அல்லனோ? அவனை யாம் ஆராய்ந்து
அறிந்துகொள் வோம் என்று கலங்குதலில்லாத கருத்துடையளாய்த் துணிந்து
யாப்பியாயினியை நோக்கித் ''தோழி! மகளிர் பலரும் புகழ்தற்குக்
காரணமான மார்பினையுடைய நம்பெருமான் கற்றுவல்ல வித்தைகள் யாவை என நீ
சென்று அவனோடு சொல்லாடி ஆராய்ந்து காண்பாயாக,'' என்று பணிப்ப;
என்க, | | | (விளக்கம்) அருமறை -
அறிதற்கரிய .மறைச் செய்தி. தோழி- யாப்பியாயினி. திரு-திருமகள்,
உணர்வு-கலையுணர்வு. அளத்தும் -அளந்தறிவோம். பயின்று வல்லவையாகிய
வித்தை என்க. ஆய்க - ஆராய்க என்க. |
|
|