பக்கம் எண் :

பக்கம் எண்:222

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           
           
           வல்லவை யாய்கென வழிபா டாற்றி
           நல்லவை யாவென நகைக்குறிப் பூர்தர
           வினவிய மகளிர்க்குச் சினவுநர்ச் சாய்த்தவன்
     175    வேத விழுப்பொரு ளோதின ருளரெனின்
           எனைத்துங் கரவேன் காட்டுவென் யானென
 
        (தோழி வினாக்களும் உதயணன் விடைகளும்)
            172-176 ; வழிபாடாற்றி.........யானென
 
(பொழிப்புரை) அதுகேட்ட யாப்பியாயினி உதயணன்பாற் சென்று
  அவனை வணங்கி வாழ்த்திப் பெருமானே! நீ கற்றுள்ள வித்தைகளுள்
  வைத்து மிகவும் சிறந்த வித்தைகள் யாவை?என்று வினவினளாக; அது
  கேட்ட உதயணன் தன் முகத்திலே நகைத்தற்குரிய மெய்ப்பாடு மெல்லப்
  படரத் ''தோழி! யான் கற்றுவல்ல வித்தைகளுள் வைத்துச் சிறந்த
  வித்தைகள் இவை எனச் சிறிதும் ஒளியாமல் வேதங்களினது சிறந்த
  பொருளை ஓதி உணர்ந்த சான்றோர் வினவுவராயின் நன்கு கூறுவேன்''
  என்று கூறா நிற்ப, என்க.
 
(விளக்கம்) நல்லவை - நல்லனவாகிய சிறந்த வித்தைகள்.
  இளையளும் பெண்ணுமாகிய உனக்கு யான் கற்று- வல்ல
  வித்தைகள் கூறிக்  காட்டுவன அல்ல என்பது கருத்து.
  மகளிர்-ஒருமை. ஈண்டு யாப்பியாயினி,  (நகைக்குறிப்பு)
  நகைப்பிற்குரிய மெய்ப்பாடு. அவள் பேதைமை கண்டு
  நகைப்பு மெய்ப்பாடு உண்டாயிற்று என்பது கருத்து.
  சினவுநர்ச் சாய்த்தவன்-பகைவரைக் கொன்ற உதயணன்.
  விழுப பொருள்-சிறந்தபொருள், எனைத்தும்-சிறிதும்,
  கரவேன்-ஒளி யேன்.