| பக்கம் எண்:223
|
|
| உரை | | | | 3. மகத காண்டம் | | | | 14. நலனாராய்ச்சி | | |
எமக்கவை யென்செயு மிசையொடு
சிவணிய
கருவிக் கரண மருவினை
யோவென
நீத்தவர் வேண்டிய துப்புர வல்லால்
180 பார்ப்பன மக்கள் பரிந்துபிற
பயிற்றார்
வேள்விக் குரிய கருவி
யாவும்
வாளேர் கண்ணி வல்லேன் யானென | | | (இதுவுமது) 177-182:
எமக்கு,,.,,.,,,யானென | | | (பொழிப்புரை) அதுகேட்ட
யாப்பியாயினி ''பெருமானே ! எம்போன்ற மகளிர்க்கு அவ்வேத விழுப்பொருள்
என்ன பயனைத் தரும்? அதுகிடக்க இசையோடு பொருந்திய யாழ்ப் பயிற்சி
உடையையோ? என்றுதான் யான் அறிய விரும்புகின்றேன் '' என்றுகூற அதுகேட்ட
உதயணன் ''பெண்ணே! சிறந்த பார்ப்பன மக்கள் துறவோ. விரும்பிய
தூய வித்தைகளாகிய அவ்வேத விழுப் பொருளையன்றி யாழ் முதலிய
இசைக் கலைகளை விரும்பிப் பயிலுதல் செய்யார். யானும் வேள்வி
செய்தற்குரிய அங்க நூல்கள் முழுவதும் கற்று வல்லேன் ஆயினேன் என்று கூறா
நிற்ப; என்க. | | | (விளக்கம்) எமக்கு என்றது
இளமகளிராகிய எம்போல்வார்க்கு என்றவாறு. அவை-அவ்வேத விழுப்பொருள்.
என்செயும்-யாது பயனைச் செய்யும்; பயன் இல்லை என்றபடி. இசையொடு
சிவணிய கருவிக்கரணம்-யாழ் குழல் முதலியன வாசிக்கும்
செயன்முறை. நீத்தவர் - உலகினைத் துறந்த துறவோர். துப்புரவு - தூயகலை,
பரிந்து - விரும்பி. பயிற்றார-பயிலார். வாளேர் கண்ணி -விளி
வேள்விக்குரிய கருவி; ஆறங்கங்கள். |
|
|