| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 14. நலனாராய்ச்சி |
| |
நல்லதொன் றுண்டெனிற் சொல்லலெங்
குறையெனத்
தோளுறு துணைவிக்குத் துயரம் வந்தநாள்
185 சூளுறு கிளவியிற் றொழுதனள்
கேட்ப
இடவரை யருவியி னிம்மென
விசைக்கும்
குடமுழ வென்பது பயிற்றினென் யானென |
| |
(இதுவுமது) 183-187;
நல்லது.........யானென |
| |
(பொழிப்புரை) அது கேட்ட
யாப்பியாயினி இசைக் கருவிகளுள் வைத்து நல்லதாகிய யாழ்ப் பயிற்சி
உனக்கு உண்டாயின் அதனைச் சொல்லவேண்டுமென்பது எங்கள் வேண்டுகோள்
என்று கூற, அதுகேட்ட உதயணன் ''பார்ப்பன மகளே.! எனது
தோளுக்குப் பொருந்திய என் வாழ்க்கைத் துணைவிக்கு என்றேனும் துன்பம்
வருமாயின் அந் நாளிலே அவள் என்னைத் தொழுது ஆணையிட்டுக் கேட்குங்கால்
அவள் துன்பந் தீர்த்தற் பொருட்டு இடமமைந்த மலையினின்றும் வீழும்
அருவிபோல இம்மென்று ஒலிக்கும் குடமுழா என்னும் ஒரோவொரு இசைக்
கருவி மட்டும் பயின்றிருக்கின்றேன் காண் என்று நகைச்சுவைப்
படக் கூறாநிற்ப; என்க. |
| |
(விளக்கம்) நல்லது-இசைக்
கருவிகளுள் வைத்து நல்லதாகிய யாழ் என்க. சொல்லல்-சொல்லுக.
குறை-வேண்டுகோள். தோளுறு துணைவி-மனைவி. சூளுறுகிளவி-ஆணையிட்டுக்
கூறும்மொழி. இம்மென-ஒலிக்குறிப்பு. குடமுழவு-ஒருவகைத் தோற்கருவி.
பயிற்றினென்-பயின்றேன். |