| உரை |
| |
| 3. மகத காண்டம் |
| |
| 14. நலனாராய்ச்சி |
| |
அவைக்குரி விச்சை வல்ல
வந்தணன்
சுவைத்தொழின் மகனென நகைத்தொழி லாடி
190 அந்தர மருங்கி னமர
ராயினும்
மந்திர மறப்ப மனநனி
கலக்கும்
பைந்தொடி பயிற்றும் பண்யாழ்
வருகெனத்
தந்துகைக் கொடுக்கலுந் தண்பூங் கொடிபோல் |
| |
(இதுவுமது) 188-193 ;
அவை.........கொடுக்கலும் |
| |
(பொழிப்புரை) நல்லோர் அவைக்கு
உரிய வித்தைகளில்வல்ல இப் பார்ப்பன மகன் நகைச்சுவையுடைய தொழிலும்
உடையன போலும் என்று நகைத்து அவ்விடத்தினின்றும் சென்றும் விசும்பின்கண்
வாழ்கின்ற தேவரும் நம்முடைய மந்திரத்தை மறக்கும்படி நெஞ்சிலே
சென்று நன்கு கலக்கும் பசிய தொடியினை யுடைய பதுமாபதி நல்லாள்
பயிலாநின்ற பண்ணமைந்த யாழினை எடுத்து வருக என்று பணி
மகளிர்க்குக் கூற அவர் கொணர்ந்து கொடுத்தலால் யாப்பியாயினி அந்த
யாழினை ஏற்றுப் பதுமாபதியின் கையிற் கொடுக்க, என்க, |
| |
(விளக்கம்) உரி -
உரிய அந்தணன் - முன்னிலைப் புறமொழி சுவைத்தொழின் மகன் -
நகைச்சுவை தரும் சொல்லும் செயலுமுடைய மகன் நகைத்தொழிலாடி - நகைத்து.
அந்தரம் - வானம். மந்திரம் - வானத்தில் இயங்குதற்குரிய மந்திரம்,
பைந்தொடி - பதுமாபதி உதயணன் கைக் கொடுக்கலும்; என்க, |