பக்கம் எண் :

பக்கம் எண்:226

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           
           
           தந்துகைக் கொடுக்கலுந் தண்பூங் கொடிபோல்
           எதிர்முகம் வாங்கி யெழினி மறைஇப்
     195    பதுமா நங்கையும் பையெனப் புகுந்து
           கோன்மணி வீணை கொண்டிவ ணியக்கத்
           தான மறிந்தி யாப்பி யாயினி
           நீநனி பாடென நேரிழை யருளித்
           துணைவன் முன்னதன் றொன்னலந் தோன்றக்
     200    கணைபுணர் கண்ணி காட்டுதல் விரும்பி
 
         (பதுமாபதியின் செயல்)
      193-200 ; தண்பூங்கொடிபோல்.........விரும்பி
 
(பொழிப்புரை) குளிர்ந்த பூங்கொடி போன்ற பதுமாபதியும் அதனை
  ஏற்றுக்கொண்டு அதனைத் திரைச் சீலையில் மறைத்துக்கொண்டு போய்
  மெல்ல மெல்லத் தன் அறைக்குள் சென்று நரம்பினையுடைய யாழினை
  ஆராய்ந்து பண்ணுறுத்தி யாப்பியாயினியை நோக்கித் ''தோழீ! நீ நன்கு
  பாடுக!'' என்று பணித்துத் தன் காதலன் முன்னர் அந்த யாழினது பழைய
  நலம் தோன்றுமாறு அம்புபோன்ற பார்வையையுடைய அப்பதுமாபதி
  காட்டுதலை விரும்பி; என்க,       யினி அந்த
  யாழினை ஏற்றுப் பதுமாபதியின் கையிற் கொடுக்க, என்க,
 
(விளக்கம்) எழினி-திரை, மறைஇ-மறைத்து. பதுமா- பதுமாபதி.
கோல்-நரம்பு. தானம்-இசைக்குரிய தாளங்கள்,
நேரிழை-பதுமாபதி. கணை-அம்பு.