பக்கம் எண் :

பக்கம் எண்:228

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           கொண்டவள் சென்று வண்டலர் தாரோய்
           வீணைக் கேற்ப விசையொடு மற்றிவை
           தானத் திரீஇத் தந்தீ கெமக்கெனக்
 
        (உதயணனும் யாப்பியாயினியும் உரையாடல்)
          206-208:கொண்டவள்.........எமக்கென
 
(பொழிப்புரை) அப் பணி பெற்ற தோழி அந்த யாழினைக் 
  கைக்கொண்டு சென்று உதயணனை அடைந்து 'வண்டு முரலும்
  மலர் மாலையினையுடையோய்! இந்த யாழின்கண் இசைக்கேற்ப
  இந்தத் திவவினை அதற்குரிய இடத்திலே ஏற்றி இருத்தி வைத்து
  எமக்குத் தந்தருள்'' என்று வேண்டா நிற்ப; என்க.
 
(விளக்கம்) அவள்-யாப்பியாயினி. இரீஇ-இருத்தி, தந்தீக- தருக