பக்கம் எண் :

பக்கம் எண்:23

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
            பசைந்துழிப் பழகல் செல்லாது பற்றுவிட்
     170    டுவந்துழித் தவிரா தோடுதல் காமுறும்
           இளையோ ருள்ளம் போலத் தளையவிழ்ந்
           தூதுமல ரொழியத் தாதுபெற நயந்து
           கார்புன மருங்கி னார்த்தனை திரிதரும்
           அஞ்சிறை யறுகாற் செம்பொறி வண்டே
 
                 (வண்டு)
            169 - 174 ; பசைந்துழி............வண்டே
 
(பொழிப்புரை) தாம் அன்பு கொண்டவிடத்தே கடைபோகப்
  பழகுதலைத் தவிர்ந்து பின்னரும் தம் மனம் விரும்பிய விடங்களிலே
  தவிராமல் ஓடுதலையே விரும்பா நின்ற இளமையுடைய காமுகக்
  கயவர் போன்று, நின்னைக் கண்டு கட்டவிழ்ந்து மலரா நிற்றலாலே நீ
  விரும்பித் தேன் பருகுகின்ற மலரை வெறுத்துப் பின்னும் புதிய தேன்
  பருகுதலையே விரும்பிக் கரிய காட்டினூடே ஆரவாரித்துத் திரியா
  நின்ற அகத்தே சிறகுடைய ஆறு கால்களையுடைய சிவந்த
  புள்ளிகளையுடைய வண்டே! வண்டே! என்க.
 
(விளக்கம்) பசைந்துழி - அன்புள்ளவிடத்தே, பழகாதென்றது
  கடைபோகப் பழகாமல் என்றவாறு. தளை-கட்டு. தாது-தேன். புனம்-காடு,