பக்கம் எண்:231
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 14. நலனாராய்ச்சி | | கோடும்
பத்தலுஞ் சேடமை
போர்வையும்
மருங்குலும் புறமுந் திருந்துதுறைத் திவவும்
225 விசித்திரக் கம்மமு மசிப்பில
னாகி
எதிர்ச்சிக் கொவ்வா முதிர்ச்சித்
தாகிப்
பொத்தகத் துடையதாய்ப் புனனின்
றறுத்துச்
செத்த தாருச் செய்தது
போலும்
இசைத்திற னின்னா தாகிய திதுவென 230
மனத்தி னெண்ணி மாசற
நாடி நீட்டக்
கொள்ளாண் மீட்டவ ளிறைஞ்சிக் | | (இதுவுமது) 223-231 ;
கோடும்,,,,,.,,,கொள்ளாண் | | (பொழிப்புரை) அந்த
யாழினதுகோடும் பத்தலும் பெருமையுடைய போர்வையும் மருங்குலும் பக்கமும்
திருத்தமுடைய துறையினையுடைய வார்க்கட்டும் விசித்திரமான தொழிற்றிறமும்
ஆகிய இவற்றை .இகழானாய், இந்த யாழ் எதிர்ச்சிக்குப் பொருந்தாத
முதிர்ச்சியை யுடையதாய் உள்ளே பொந்துடையதாய் நீரில் நின்று
அறுத்தெடுத்த பட்டமரத்தினால் செய்யப்பட்டதுபோலும். இக் காரணத்தால்
இதன் இசைத்திறம் கேள்விக்கு இன்னாதாகியது-போலும், என்று தன்
நெஞ்சத்தில் நினைந்து பின்னரும் அதனைக் குற்றந்தீர ஆராய்ந்து
யாப்பியாயினியின்பால் நீட்ட அதனை ஏற்றுக் கொள்ளாளாய்
என்க, | | (விளக்கம்) எதிர்ச்சி-வளர்ச்சி. பொத்து-பொந்து. புனல்- நீர்,
செத்ததாரு-பட்டமரம். |
|
|