உரை |
|
3. மகத காண்டம் |
|
14. நலனாராய்ச்சி |
|
புறத்தோ
னன்மை திறப்படத் தெளிந்து
240 தாழிருங் கூந்தற் றோழியைச்
சேர்ந்திவன்
யாழறி வித்தக னறிந்தரு
ளென்றலின்
இன்னுஞ் சென்றவ னன்ன
னாகுதல்
நன்னுத லமர்தர நாடிக் காண்கெனப் |
|
(இதுவுமது) 239 - 243 ;
புறத்தோன்.........காண்கென |
|
(பொழிப்புரை) உதயணன் யாழ்
வித்தைக்கு அயலான் அல்லன் என்னும் உண்மையை நன்கு தெளிந்துகொண்டு
தாழ்ந்த கூந்தலையுடைய தன் தோழியாகிய பதுமாபதியை எய்தி, ''நங்காய்!
நம்பெருமான் யாழறிவித்தகன் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பெருமாட்டி அறிந்தருளுக'' என்று அறிவுறுத்தவும் அப் பதுமாபதி 'அன்புடையோய்
நீ மீண்டும் சென்று அப் பெருமகன் அத்தகையவன் ஆதலைப் பின்னும் நன்கு
ஆராய்ந்து கண்டு வருக! 'என்று ஏவுதலாலே என்க. |
|
(விளக்கம்) புறத்தோன்-யாழ் வித்தைக்கு அயலோன், புறத்தோன் அல்லன் என்றது நன்கு
கற்றவன் என்பதனை வற்புறுத்தி நின்றது. தாழிருங் கூந்தற் றோழி என்றது
பதுமாபதியை. யாழ் வித்தையில் மிகவும் சிறந்தவன் என்பாள்
யாழறிவித்தகன் என்றாள். அன்னன்-அத் தன்மையுடையான். நன்னுதல் - விளி.
அமர்தர ஆரமர விருந்து. |