பக்கம் எண் :

பக்கம் எண்:234

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           பின்னுஞ் சேர்ந்து பெருந்தகை யெமக்கிது
     245    பண்ணுமை நிறீஇயோர் பாணிக் கீதம்
           பாடல் வேண்டுமென் றாடமைத் தோளி
           மறுத்துங் குறைகொள மறத்தகை மார்பன்      
 
          (இதுவுமது)
     244 - 247; பின்னும்............குறைகொள
 
(பொழிப்புரை) அங்ஙனமே யாப்பியாயினி மீண்டும் உதயணன்,
  பாற் சென்று ''பெருந்தகாய்! எம்பொருட்டு இந்த யாழினைப் பண்ணுறுத்தி
  இதன்கண் தாளமமைந்த ஒரு பாட்டினைப் பாடிக்காட்டியருளுதல்
  வேண்டும்'' என்று அசைகின்ற மூங்கில்போன்ற தோளையுடைய
  அப்பார்ப்பன மகள் மீண்டும் வேண்டிக்கொள்ள நிற்றலால்; என்க.
 
(விளக்கம்) பெருந்தகை-விளி. இது-இந்த யாழின்கண்.
  பண்ணுமை நிறீஇ-பண்ணின் தன்மையை நிறுத்தி. பாணிக்
  கீதம்- தாளமமைந்த இசைப் பாட்டு, ஆடு
  அமை - அசைகின்ற மூங்கில்.