பக்கம் எண் :

பக்கம் எண்:235

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
            மறுத்துங் குறைகொள மறத்தகை மார்பன்
            என்கட் கிடந்த வெல்லா மற்றிவள்
            தன்கண் மதியிற் றான்றெரிந் துணர்ந்தனள்
     250    பெரிதிவட் கறிவெனத் தெருமந் திருந்திது
           வல்லுந னல்லே னல்லோய் நானென
 
          (இதுவுமது)
     247 - 251 ; மறத்தகை...........நானென
 
(பொழிப்புரை) அவ் வேண்டுகோளைக் கேட்ட உதயண
  மன்னன் நன்று நன்கு என்பாலமைந்த இசைத் திறங்களையெல்லாம்
  இவள் நன்றாக ஆராய்ந்து அறிந்து கொண்டனள் ஆதலால் இவளறிவு
  சாலவும் பெரிதேயாம் என்று சிறிது பொழுது மருண்டிருந்து பின்னரும்
  அத்தோழியை நோக்கி ''நல்லோய் இங்ஙனம் பாட யான் வல்லேன்
  அல்லேன்'' என்று மறுத்துக் கூறா நிற்ப; என்க.
 
(விளக்கம்) மறத்தகை மார்பன் - மறப் பண்புடைய
  மார்பினையுடைய உதயணன். தன்கண்மதி - தன்னுடைய அறிவு.
 தெருமந்து- மயங்கி, வியப்பினால் மயங்கி என்றவாறு, அறிவு
 இவட்குப் பெரிது, என்க,