பக்கம் எண் :

பக்கம் எண்:236

உரை
 
3. மகத காண்டம்
 
14. நலனாராய்ச்சி
 
         
           ஒருமனத் தன்ன வுற்றார்த் தேற்றா
           அருவினை யில்லென வறிந்தோர் கூறிய
           பெருமொழி மெய்யெனப் பிரியாக் காதலொ
    255    டின்ப மயக்க மெய்திய வெம்மாட்
           டன்புதுணை யாக யாதொன் றாயினும்
          மறாஅ தருளென வுறாஅன் போல
 
          (இதுவுமது)
     252 - 257 ; ஒரு............அருளென
 
(பொழிப்புரை) அதுகேட்டதோழி, ''ஒரு மனமுடையோர்
  போலக் கலந்த கேளிர்க்குத் தெளித்தற்கியலாத அருஞ்செயல் இல்லை
  என்று சான்றோர் உரைத்த பெருமொழி மெய்ம் மொழியன்றோ?
  பெருமான்பால் பிரிதலில்லாத அன்போடு இன்ப மயக்கமுமெய்திய
  அடிச்சியரேமாகிய எங்களிடத்து அவ் வன்பே பற்றுக்கோடாக
  யாதொன்றையும் மறாது அருளல்' வேண்டும்'' எனப் பின்னரும் இரவா
  நிற்ப ; என்க.
 
(விளக்கம்) ஒரு மனத்தன்ன உற்றார்-அன்பினால் ஒன்றுபட்ட
  கேளிர். அருவினை-அரியசெயல். பெரு மொழி- பெருமையுடைய
  மொழி. இன்ப மயக்கம்-இன்பம் நுகர்தலிலுண்டாகும் மனமயக்கம்
  இது பதுமாபதியைக் குறித்துக் கூறியயவாறு.