(பொழிப்புரை) தன் நெஞ்சங்
கொள்ளாத பேருவகை உடையளாய் ஒளி பொருந்திய அணிகலன்களையுடைய
தோழியாகிய யாப்பியாயினியோடு சேர்ந்து உதயண மன்னனை நன்கு பேணி மிகப்
பெரிய காமவின்பத்தைக் களவொழுக்கத்தின் வாயிலாய் நுகர்ந்து
நாட்களைக் கழித்து அப் பதுமாபதி நங்கை தன் தாய் முதலியோர்க்கும்
தெரியாதபடி ஒழுகுவாளாயினள் என்க.
(விளக்கம்) தோழி -
யாப்பியாயினி. கழிப்பி - நாள்களைக் கழித்து என்க, உரிமை -
கோப்பெருந்தேவி முதலியோர்.