உரை |
|
3. மகத காண்டம் |
|
15. யாழ்நலந் தெரிந்தது |
|
தினைப்பக
வனைத்தும் பழிப்பதொன் றின்றி
வனப்புடைத் தம்மவிவ் வள்ளுயிர்ப்
பேரியாழ்
தனக்கிணை யில்லா வனப்பின
தாகியு
நிணக்கொழுங் கோல்க ளுணக்குத லின்மையின் 30
உறுபுரிக் கொண்டன பிறநரம்பு கொணர்கென |
|
(உதயணன் யாழ்
நரம்பின் குற்றங்களைத்
தெரிவித்தல்.)
26 - 30 ; தினை............கொணர்கென |
|
(பொழிப்புரை) அந்த யாழினை ஏற்றுக்கொண்ட உதயணகுமரன் அதைக் கூர்ந்து நோக்கித்
தோழிகேள்; இந்த யாழ் ஒரு தினையிற் பாதியளவு குற்றம் தானும் இலதாகும்.
யாழ்க்குரிய அழகனைத்தும் உடையது. பெரிய ஓசையினையுடைய இப்பேரியாழ்
தனக்கு இணையில்லாததா யிருந்தும் ,இதனுடைய நிணமமைந்த கொழுவிய
நரம்புகள் நன்கு உலர்த்தப்படாமையின் மிக்க முறுக்கினைக்
கொண்டுள்ளன. ஆதலின் வேறு நரம்பு கொணர்வாயாக என்று கூற;
என்க, |
|
(விளக்கம்) தினைப்பகவு-தினையினது
பிளவு ; சிறுமைக்கு ஒன்று கூறிய படியாம். பழிப்பது-குற்றம். வனப்பு-அழகு.
அம்ம-கேட்பித்தற்கண் வந்தது. வள் உயிர்- பெரிய ஓசை. கோல்கள் -
நரம்புகள். உணக்குதல் - உலர்த்துதல். உலறுபுரி -மிகையாய முறுக்கு, |