உரை |
|
3. மகத காண்டம் |
|
15. யாழ்நலந் தெரிந்தது |
|
மதுக்கமழ்
கோதை விதுப்பொடு விரும்பிப்
புதுக்கோல் கொணர்ந்து பொருக்கென
நீட்ட நோக்கிக்
கொண்டே பூக்கமழ் தாரோன்
வகையில விவையெனத் தகைவிரல்
கூப்பி 35 அவற்றது குற்ற மறியக்
கூறினை இவற்றது
குற்றமு மெம்மனந் தெளியக்
காட்டுதல் குறையென மீட்டவ
ளுரைப்ப |
|
(இதுவுமது)
31 - 37 : மது............உரைப்ப |
|
(பொழிப்புரை) தேன் மணங் கமழும் மலர் மாலை யணிந்த யாப்பியாயினி அதுகேட்டுவிரைந்து
விருப்பத்தோடு வேறு புதிய நரம்பினைக் கொணர்ந்து விரைந்து கொடுப்ப
உதயணன் அதனைத்தான் கைக் கொள்ளாமலேயே அந்நரம்பினை நோக்கிக்கொண்டே
நங்காய் இவைகளும் நல்லன அல்ல என்று கூறாநிற்ப. அதுகேட்ட
யாப்பியாயினி தன் அழகிய கைகளைக் கூப்பித்தொழுது, ''சான்றோய்! அந்த
நரம்புகளின் குற்றம் இவை யெனயாங்கள் தெரிந்து கொள்ளும்படி கூறினாய்.
அங்ஙனமே இந்நரம்புகளின் குற்றங்களையும் எங்கள் மனம்
தெளிந்துகொள்ளும்படி விளக்கிக் காட்டுதல் வேண்டுமென்பது என்னுடைய
வேண்டுகோளாகும்"் என்று மீண்டும் அவள் வேண்டாநிற்ப என்க. |
|
(விளக்கம்) புதுக்கோல்
- புதிய நரம்பு. பொருக்கென - விரைவுக் குறிப்பு. வகை - நல்ல வகை. தகை -
அழகு. குறை - வேண்டுகோள். அவள்; யாப்பியாயினி |