பக்கம் எண் :

பக்கம் எண்:248

உரை
 
3. மகத காண்டம்
 
15. யாழ்நலந் தெரிந்தது
 
            நன்னுதன் மடவோய் நன்றல மற்றிவை
           முன்னைய போலா மூத்து.........தைந்த
     40    வாவி சா,,,,,,,,.,,,,,,,,.ன வாயினும்
           பண்ணறச் சுகிர்ந்து பன்னுத லின்மையும்
           புகரற வுணங்கிப் புலவற லின்மையும்
           குறும்புரிக் கொள்ளாது நெடும்புரித் தாதலும்
           நிலமிசை விடுதலிற் றலைமயிர் தழீஇ
     45    மணலகம் பொதிந்து துகளுடைத் தாதலும்
           பொன்னே காணெனப் புரிமுறை நெகிழ்த்துத்
           துன்னார்க் கடந்தோன் றோன்றக் காட்ட
 
                 (இதுவுமது)
            38 - 47 ; நன்னுதன்...........காட்ட
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணன் நல்ல நுதலையுடைய
  பேதையே இவை அந் நரம்புகளைப் போலாவாயினும் முதிர்ந்து...
  ......தைந்த வாவிசா........னவாயினும் பண்படுத்துதல் முடியும்படி நன்கு
  சீவி ஆராயப் படாமையானும் குற்றந் தீரும்படி நன்கு காய்ந்து ஊன்
  அற்றுப் போகாமையானும் குறிய முறுக்குடையனவாகாமல் நெடிய
  முறுக்குடையனவாதலும் நிலத்தின் மேற் கிடத்தினமையால்
  தலைமயிரைத் தழுவிக்கொண்டு தம் முள்ளே மணலையும் துகளையும்
  உடையனவாதலாலும் இவையும் நல்லன அல்ல என்று கூறித்,
  'திருமகள் போல்வாய்! உதோ காண்,'' என்று கூறிப் பகைவரை வென்று
  உயர்ந்த உதயணன் அப் புதிய நரம்பினைக் கையில் வாங்கி அதன்
  முறுக்கினை உடைத்து அம்முறுக்கின் அகத்திலிருந்த தலைமயிரையும்
  தூசியையும், மணலையும் அத்தோழி காணும்படி காட்டா நிற்ப ; என்க
 
(விளக்கம்) இப் பகுதியில் சில சொற்கள் இறந்துபட்டன. சுகிர்ந்து
  - சீவி. பன்னுதல்-ஆராய்தல். .புகர் - குற்றம். புலவு - ஊன். விடுதலின் -
  கிடத்துதலாலே. பொன்னே; விளி, துன்னார், பகைவர்.