உரை |
|
3. மகத காண்டம் |
|
15. யாழ்நலந் தெரிந்தது |
|
யாழும்
பாட்டும் யாவரு மறிவர்
வீழா நண்பி னிவன்போல்
விரித்து 50 நுனித்துரை மாந்த ரில்லென
நுவன்று மன்றப்
புகன்று மாமழை நோக்கி
மறித்தும் போகி நெடுத்துநீர்த்
தொழுகிப்
பொன்றிரித் தன்ன நிறத்தன சென்றினி
தொலித்த லோவா நலத்தகு
நுண்ணரம் 55 பாவன கொடுப்ப மேவனன்
விரும்பிக் |
|
(இதுவுமது)
48 - 55 ; யாழும்............கொடுப்ப |
|
(பொழிப்புரை) அதுகண்ட யாப்பியாயினி இவ்வுலகின் யாழின் இயல்பும் பாட்டினது இயல்பும்
அறிவோர் பலராவர். கெடாத நண்பினையுடைய இப் பெருமகன் போல அவற்றின்
இயல்புகளை நுணுக்கமாக எடுத்துக் கூறும் மாந்தர்கள் இலர் என்று தன்னுட்கருதி
முன்னினும் மிகுதியாக அவன்பால் விருப்ப முடையளாய் அழகிய
நோக்குடைய அந் நங்கை மீண்டுஞ்சென்று நெறிப்புடையனவாய் நீர்மையோடு
நீண்டு பொற்கம்பியினை முறுக்கினாற் போன்ற நிறத்தினை உடையனவாய் ஒலி
நீண்டு இனிதாக ஒலித்தல் ஒழியாத நன்மை மிக்க நுண்ணிய நரம்புகள் பல
அந்த நல்லியாழுக்கு ஏற்பனவாகக் கொணர்ந்து கொடுப்ப,
என்க, |
|
(விளக்கம்) யாவரும்
என்றது பலர் என்பதுபடநின்றது, நுனித்துறை மாந்தர்-கூரியதாக எடுத்துரைக்கும்
மாந்தர். நுவன்று- கருதி, மன்ற - தேற்றமாக. புகன்று - விரும்பி.
மறித்தும் - மீண்டும் நெறித்து - நெறிப்புடையனவாய், நீர்த்து-
நீர்மையுடையனவாய். ஒழுகி-நீண்டு. ஓவா-ஒழியாத. ஆவன-அந்த யாழினுக்குப்
பொருந்துவன. |