பக்கம் எண்:251
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 15. யாழ்நலந் தெரிந்தது | | கோடுயர்
மாடத்துத் தோடுயர் தீரக்
குறிவயிற் புணர்ந்து நெறிவயிற்
றிரியார்
வாயினுஞ் செவியினுங் கண்ணினு மூக்கினும் 65
மேதகு மெய்யினு மோத லின்றி
உண்டுங் கேட்டுங் கண்டு
நாறியும் உற்று
மற்றிவை யற்ற மின்றி
ஐம்புல வாயிலுந் தம்புலம் பெருக
| | (உதயணன்
பதுமாபதியாகிய இருவர்
நிலை)
62 - 68 ; கோடு.........பெருக | | (பொழிப்புரை) அக் காதற்றுணைவ ரிருவரும் கொடுமுடி உயர்ந்த அக் கன்னி மாடத்தின்கண்
தத்தம் தோண் மெலிவு தீரும்படி காமக் குறிப்புத் தோன்றுமிடத்திலெல்லாம்
புணர்ச்சி எய்தி அன்பு நெறியிற் பிறழாதவராய் வாயானும்
செவியானும் கண்ணானும் மூக்கானும் மேன்மை தக்கிருக்கின்ற
மெய்யானும் ஒழிதலின்றி உண்டும், கேட்டும், கண்டும், உயிர்த்தும், உற்றும்
இவ்வகை இன்பங்களில் சோர்வின்றித் தத்தம் ஐம்புலக்
கருவிகளும் தத்தமக்குரிய உணர்ச்சிகளில் பெருகா நிற்பவும்,
என்க
| | (விளக்கம்) தோள்
துயர் - தோளின் மெலிவு. குறி - காமக் குறிப்பு. நெறி - அன்புநெறி.
''கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியுமைம்புலனு, மொண்டொடி கண்ணேயுள ''
(குறள்-1101)
|
|
|