பக்கம் எண் :

பக்கம் எண்:252

உரை
 
3. மகத காண்டம்
 
15. யாழ்நலந் தெரிந்தது
 
           வைக றோறு மெய்வகை தெரிவார்
     70    செய்வளைத் தோளியைச் சேர்ந்துநல னுகர்வதோர்
           தெய்வங் கொல்லெனத் தெளித லாற்றார்
           உருவினு முணர்வினு மொப்போ ரில்லென
           வரிவளைத் தோளியொடு வத்தவர் பெருமகன்
           ஒழுகினன் மாதோ வொருமதி யளவென்.
 
                     (இதுவுமது)
          69 - 74 ; வைகல் ........ அளவென்
 
(பொழிப்புரை) பதுமாபதியின் மெய்யின் தன்மையை நாள்தோறும்
  ஆராயும் செவிலி முதலியோர் அழகுறச் செய்யப்பட்ட
  வளையலையுடைய தோளையுடைய நம் பதுமாபதியைச் சேர்ந்து
  அவளது பெண்மை நலத்தை நுகராநின்ற தெய்வம் ஒன்று
  உண்டுகொலோ என்று ஐயுற்றுத் தெளியாதவராகத் தனது
  உருவாலும் உணர்வாலும் தனக்கு நிகராவார் உலகில் இல்லை
  என்னும்படி உடல்வளமுறுகின்ற அப்பதுமாபதியோடு வத்தவநாட்டு
  மன்னனாகிய உதயணன் ஒரு திங்களளவும் இன்ப ஒழுக்கம் ஒழுகா
  நின்றனன், என்க.
 
(விளக்கம்) மெய்வகை தெரிவார் - அவள் உடலின் தன்மையை
  ஆராய்ந்து காணும் செவிலி முதலியோர் பதுமாபதியின் மெய்நாடோறும்
  புத்தழகுபெற்று வருதலால் செவிலி முதலியோர் ஐயுற்றாரென்றபடி.
  ஒருமதி-ஒரு திங்கள்.

                15.யாழ்நலந் தெரிந்தது முற்றிற்று.