உரை |
|
3. மகத காண்டம் |
|
16. பதுமாபதியைப் பிரிந்தது |
|
ஒழுகா நின்ற
வொருமதி யெல்லையுள்
வழிநா ணிகழ்வின் வண்ணங் கூறுவேன
|
|
(ஆசிரியர்
கூற்று) 1-2:
ஒழுகா.........கூறுவேன
|
|
(பொழிப்புரை) இவ்வாறு
உதயணன் பதுமாபதியோடு அவளது கன்னி மாடத்தின்கட் களவொழுக்கம்
நிகழ்த்திய ஒரு திங்கள் கழிந்த வழிநாளிலே நிகழ்ந்த நிகழ்ச்சியினை
இனிக் கூறுவேன் கேண்மின், என்க.
|
|
(விளக்கம்) இது
நூலாசிரியர் கூற்று. நுதலிப்புகுதல் என்னும் தந்திரவுத்தி. ஒரு திங்கள்
கழிந்த வழிநாள் என்க. வண்ணம் - தன்மை. கேண்மின் என்பது
குறிப்பெச்சம்.
|