உரை |
|
3. மகத காண்டம் |
|
16. பதுமாபதியைப் பிரிந்தது |
|
ஏற்றெதிர்
கொள்ளு மின்பக் கம்பலை
கூற்றெதிர் கொள்ளாக் கொள்கைத் தாகப்
15 புரவியும் யானையும் பூங்கொடித்
தேரும் விரவிய
படையொடு தருசகன் போதரப்
|
|
(இதுவுமது)
13-16 ; ஏற்றெதிர்........,போதர
|
|
(பொழிப்புரை) அவன்
வருகையினை அறிந்த தருசக மன்னன் அந்த அச்சுவப் பெருமகனை வரவேற்று
எதிர் கொள்ளும் பொருட்டு இன்னிசைக் கருவிகளின் இன்ப முடைய
ஆரவாரம் ஒருவர் மொழியை ஒருவர் கேட்க வியலாதபடி பெரிதும் முழங்கா
நிற்பவும், குதிரையும் யானையும் அழகிய கொடியுயர்த்தப்பட்ட தேரும்
காலாளும் விரவிய தன் பெரும் படையோடு வாரா நிற்பவும்
என்க.
|
|
(விளக்கம்) எதிர்கொள்ளும் பொருட்டு உண்டாகிய இன்பக்கம்பலை யென்க.
கம்பலை-ஆரவாரம், இன்னிசையார வாரமாகலின் இன்பக் கம்பலையென்றார்.
கூற்று-மொழி, ஒருவர் மொழியை ஒருவர் அறிந்து கொள்ளவியலாத
தன்மையுடையதாக வென்க. முப்படை கூறினமையின் இனம்பற்றிக் காலாட்படையுங்
கொள்க
|