பக்கம் எண்:257
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 16. பதுமாபதியைப் பிரிந்தது | | 25 தொல்லென் மாககட
லுவாவுற் றன்ன
கல்லெ னகரங் காண்பது
விரும்பி
மழைநிரைத் தன்ன மாடந் தோறும்
இழைநிரைத் தலங்க வேறி யிறைகொள | |
(இதுவுமது) 25
-28; ஒல்லென்,,,,,,,,,இறைகொள | | (பொழிப்புரை) ஒல்லென்று
முழங்கும் பெரிய கடல் உவாநாளிலே பொங்கி ஆரவாரித்தாற் போன்று கல்லென
முழங்காநின்ற அந்த இராசகிரிய நகரத்தினைக் கண்டு களித்தலை
விரும்பி மைந்தரும் மகளிரும் ஆடையணிகளாலே ஒப்பனை செய்து கொண்டு தங்கள்
கூந்தலானும் குஞ்சியானும் முகில்கள் குழுமினாற்போன்று தோன்றும்படி மேனிலை
மாடங்களிலே விளங்கும்படி ஏறித் தங்குதலைச் செய்க; என்க. | | (விளக்கம்) ஒல்லென் :
ஒலிக்குறிப்பு, உவா-ஈண்டுப் பூரணை. கல்லென் : ஒலிக்குறிப்பு. மைந்தரும்
மகளிரும் அணிகலன்களோடே செறிதலின் அவர்தம் தலைமயிரும்
அணிகலனும் முகிலும் மின்னலும் போலத் தோன்றுதலின் மழை
நிரைத்தன்ன மாடம் என்றார். இறை-தங்குதல். |
|
|