பக்கம் எண் :

பக்கம் எண்:258

உரை
 
3. மகத காண்டம்
 
16. பதுமாபதியைப் பிரிந்தது
 
           மலைத்தொகை யன்ன மாட மாநகர்
     30    தலைத்தலைப் போந்து தலைப்பெய் தீண்டி
           இடுமணி யானை யிரீஇ யிழிந்துதன்
           தொடியணி தடக்கை தோன்ற வோச்சித்
           தாக்கருந் தானைத் தருசகன் கழலடி
           கூப்புபு பணிந்த கொடும்பூட் குருசிலை
     35    எடுத்தவன...................................................................
 
                    (இதுவுமது)
             29 - 35; மலை.........எடுத்தவன
 
(பொழிப்புரை) மலைகள் ஓரிடத்தே தொக்கிருந்தாற் போன்ற
  மாடமாளிகைகளையுடைய அந்தப் பெரிய நகரத்தே வலமாக
  வீதி தோறுஞ் சென்று தன் மகிழ்ச்சிக்கு அறிகுறியாக அச்சுவப்
  பெருமகன் தனது தொடியணிந்த பெரிய கையினை மக்கள்
  காண உயர்த்திச் சென்று அரண்மனையை எய்தி மணி கட்டிய
  தனது யானையை அரண்மனை முற்றத்தே நிறுத்திப் பகைவரால்
  தாக்குதற்கு அரிய படையினையுடைய தருசக மன்னனுடைய
  வீரக்கழல் அணிந்த திருவடிகளைக் கைகூப்பி வணங்கிய
  வளைந்த அணிகலன்களையுடைய அந்த அச்சுவப் பெருமகனைத்
  தருசகன் கைகளால் தழீஇ எடுத்து அவன--------------
 
(விளக்கம்) (குறிப்பு; இக் காதையில் ஒன்று முதலாக
  முப்பத்து நான்கு அடிகளும் 35 ஆம் அடியில் , ''எடுத்தவன''
  என்னும் ஒரு சீர் நிற்க எஞ்சிய பிற்பகுதியும் கிடைத்தில.)

                16. பதுமாபதியைப் பிரிந்தது முற்றிற்று.
      -----------------------------------------------------------------------