பக்கம் எண் :

பக்கம் எண்:261

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           காண்டற் காகாக் கடன்மருள் பெரும்படைத்
            தீண்டற் காகாத் திருந்துமதி லணிந்த
            வாரண வாசி வளந்தந் தோம்பும்
            ஏரணி நெடுங்குடை யிறைமீக் கூரிய
      15     படைநவி றடக்கைப் பைந்தார்க் கருங்கழல்
            அடவி யரசெனு மாண்டகை யொருவனும்
 
                     (இதுவுமது)
            11 - 16 : காண்டற்கு.........ஒருவனும்
 
(பொழிப்புரை) பகைவரால் காண்பதற்கு மியலாத கடல் போன்ற பெரிய படையை உடையவனும் பகைவரால் தீண்டற்குமியலாத  திருத்தமுடைய மதில் சூழ்ந்த வாரணவாசி என்னும் நகரத்தை வளம் பெருக்கிப் பாதுகாப்பவனும், அழகுடைய நெடிய குடையினையுடைய அரசருள்ளே மேம்பட்டவனும் படைக்கலம்  பயின்ற பெரிய பையினையுடையவனும் பசிய மலர் மாலையினையும்  வலிய வீரக் கழலையும் அணிந்தவனும் அடவி அரசன் என்னும் பெயரையுடையவனும் ஆகிய ஆண்மைத் தன்மைமிக்க ஒருவனும்; என்க.
 
(விளக்கம்) கடல்மருள் பெரும்படை - கடல் போன்ற பெரிய படை; பகைவரால் தீண்டுதற்கும் ஆகா மதில் என்க. வாரணவாசி - ஒரு நகரம். ஏர் - அழகு. இறை - அரசர்கள். மீக்கூரிய - மேம்பட்ட. அடவியரசன் : பெயர். ஆண்டகை - ஆண்மைத் தன்மை மிகுந்தவன்.