பக்கம் எண் :

பக்கம் எண்:263

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           மாற்றோர்த் தொலைத்த கூற்றுறழ் கொடுந்தொழில்
           மிக்குயர் வென்றியொடு வேந்தரை யகப்படுத்
           தக்களம் வேட்ட வடலருஞ் சீற்றத்துப்
     25    புனைமதி லோங்கிய போதன புரத்திறை
           மிலைச்ச னென்னு நலத்தகை யொருவனும்
 
                       (இதுவுமது)
              22 - 26 : மாற்றோர்.........ஒருவனும்
 
(பொழிப்புரை) தன் பகைவர்களை யெல்லாம் கொன்றொழித்தவனும் கூற்றுவனை யொத்த கொலைத் தொழிலில் மிக்கு உயர்ந்த வெற்றியோடு பகை வேந்தர் பலரை அகப்படுத்தும் அப்போர்க்  களத்திலேயே களவேள்வி செய்தவனும், பகைவரால் வெல்லுதற்கரிய வெகுளியை உடையவனும் ஆகிய ஒப்பனை செய்யப்பட்ட உயர்ந்த மதில்களையுடைய போதனபுரத்திற்கு அரசனும் 'மிலைச்சன்' என்னும் பெயருடையானும் ஆகிய அழகன் ஒருவனும்; என்க.
 
(விளக்கம்) மாற்றோர் - பகைவர். கூற்றுறழ் - கூற்றுவனை யொத்த. வேட்ட - வேள்வி செய்த. நலத்தகை - அழகுடையான்.