உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
மல்ல னென்னும் வெல்போர்
விடலையும்
தானை மன்னரை மானம்
வாட்டிய
ஊனிவர் நெடுவே லுருவக் கழற்காற்
35 பொங்குமயிர் மான்றேர்த் திருநகர்க்
கிறைவன்
வெந்திறற் செய்கை வேசா
லியுமென
அடற்றகை மன்னர் படைத்தொகை கூட்டிச்
|
|
(இதுவுமது)
32 - 37 : மல்லன்.........கூட்டி
|
|
(பொழிப்புரை) 'மல்லன்' என்னும் பெயரையுடைய,
சென்ற போர்தொறும் வெல்லும் இயல்புடைய அரசனும், படைமிக்க பகை மன்னரை மானங் கெடச்
செய்தவனும், ஊன் ஒழுகுகின்ற நெடிய வேலையும் அழகிய வீரக்கழல் கட்டிய கால்களையும்,
மிக்க பிடரி மயிரையுடைய குதிரை பூட்டிய தேரினையும் உடைய
'திருநகர்க்கு' அரசனுமாகிய வெவ்விய ஆற்றலையும் செயலையுமுடைய
'வேசாலி' என்னும் அரசனும் ஆகிய இங்குக் கூறப்பட்ட இவ்வெற்றி
மிக்க அரசர்கள் தங்கள் படைகளை யெல்லாம் ஒன்றாகக் கூட்டிக்கொண்டு;
என்க.
|
|
(விளக்கம்) விடலை : அரசன். ஊனிவர் - ஊன் - ஒழுகுகின்ற.
உருவக்கழல் - அழகிய வீரக்கழல். (1) விரிசிகன்; (2) எலிச்செவியரசன்; (3)
அடவியரசன்; (4) அயோத்தியரசன்; (5) மிலைச்சன்; (6) சங்கரவரசன்; (7) மல்லன்;
(8) வேசாலி ஆகிய இவ்வெண்மரும் என்க.
|