பக்கம் எண் :

பக்கம் எண்:27

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
            உறுதி மொழியி னுணர்த்துவன ராகிப்
           பல்வகைத் தோழர் படிவ வேடமொடு
           செல்வ மகதத் தெல்லை யெய்தி
           ஒருவழிப் பழகல் செல்லா துருவுகரந்து
     215    பெருவழி முன்னினர் பெருந்தகைக் கொண்டென்
 
         (உதயணன் முதலியோர் மகதநாட்டின் எல்லையை அடைதல்)
              211 - 215 : உறுதி.....................கொண்டென்
 
(பொழிப்புரை) உருமண்ணுவா முதலிய தோழர்கள் பல்வேறு
  உறுதி மொழிகளைக் கூறிக் கூறி மயக்கொழித்துத் தெளிவிப்போராய்ப்
  பல்வேறுவகை உள் வரிக்கோலமுடைய தோழர் வடிவத்தோடே ?ஓரிடத்திற்
  போலப் பிறவிடத்தும் பழகாமல் பெருந்தகைமையுடைய அவ்வுதயண
  மன்னனை அழைத்துக் கொண்டு சென்று செல்வமிக்க மகத நாட்டின்
  எல்லையை  அடைந்து அவ்வெல்லையினின்றும் அகத்தே செல்லாநின்ற
  பெருவழி வாயிலாய் அந்நாட்டினுட் புகுவாராயினர் என்க.
 
(விளக்கம்) உறுதி மொழி-வாழ்க்கைக்கு உறுதி பயக்கும் மொழிகள்.
  படிவவேடம் - உள் வரிக்கோலம் உருவு கரந்து - தம்முண்மை வடிவத்தை
  மறைத்துக் கொண்டு. ஒரு வழிப் பழகல் செல்லாதென்றது, ஓரிடத்திற்போல
  எவ்விடத்தும் பழகாமல் என்றவாறு. பெருவழி - பெருஞ்சாலை, பெருந்தகை
  - உதயண மன்னன்,

                1 - யாத்திரை போகியது முற்றிற்று