உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
அகநகர்
வரைப்பி னரச
னறியப்
புறநக ரெல்லாம் பூசலிற் றுவன்றி
70 அச்ச நிலைமை யரசற்
கிசைத்தலின்
மெச்சா மன்னரை மெலிவது
நாடித்
தருசகன் றமரொடு தெருமர
லெய்தி
மாணகற் கண்டிந் நிலைமை கூறென
|
|
(தருசகன்
செயல்)
68 - 73 : அகநகர்.........கூறென
|
|
(பொழிப்புரை) இராசகிரிய நகரத்தின் அகத்தேயுள்ள அரண்மனையின்கண்ணிருந்த தருசக
மன்னன் அறியும்படி புறநகர் முழுவதும் பெருமுழக்கத்துடன் காணப்படுகின்ற அஞ்சுதற்குரிய அந்த
நிலைமையை ஒற்றர்கள் வந்து தருசகனுக்குக் கூறாநிற்றலாலே அந் நிகழ்ச்சி கேட்ட
அம்மன்னவன் தன்னை மதியாத அப் பகை மன்னர்களைத் தோற்கச் செய்யும் வழியை
ஆராய்ந்து அதற்கு ஒரு முடிவு பெறாமல் தன் அமைச்சர்களோடு மனக்குழப்பமடைந்து
அயிராபதி என்னும் தோழியை அழைத்து 'ந'ீ சென்று இந் நிலைமையை மாணகனுக்கு
அறிவிப்பாயாக' என்று பணிப்ப; என்க.
|
|
(விளக்கம்) அக நகர், புற நகர் என்பன, நகரகம் - நகர்ப்புறம் என்னும் ஆறாம்
வேற்றுமைத் தொகை முன்பின் மாறி நின்றன ; அரசன் - தருசகன். பூசல் - பேராரவாரம்.
துவன்றி - துவன்ற என்க. அச்சநிலைமை - அஞ்சுதற்குக் காரணமான நிலைமை. மெச்சா மன்னர்
- பகைவர். தமர் - அமைச்சர் முதலியோர். தெருமரல் - சுழற்சி. மாணகன் - உதயணன்
மேற்கொண்டுள்ள பார்ப்பன வேடத்திற்குப் பொருந்தக்கூறிக்கொண்ட
பெயர்.
|