உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
ஆண நெஞ்சத்
தயிரா பதிவந் 75 தனங்கத்
தானம் புகுந்தவற்
கண்டு
கூப்பிய கையினள் கோயிலுட்
பட்டதும்
கோற்றொடி மாதர் கொள்கையுங் கூற
|
|
(அயிராபதி
உதயணனிடம்
கூறல்)
74 - 77 : ஆணம் ......... கூற
|
|
(பொழிப்புரை) அன்புமிக்க நெஞ்சத்தையுடைய அவ்வயிராபதி வந்து காமக் கோட்டத்தினுட்
புகுந்து அவ்விடத்தே உதயணனைக் கண்டு கைகூப்பித் தொழுது அரண்மனையின்கண் நிகழ்ந்த
நிகழ்ச்சிகளையும் கோற்றொடியணிந்த பதுமாபதியினது கொள்கையையும் கூறா நிற்ப;
என்க.
|
|
(விளக்கம்) ஆணம் - அன்பு. அனங்கத்தானம் - காமக்கோட்டம், அவற்கண்டு -
உதயணனைக் கண்டு. மாதர் : பதுமாபதி.
|