பக்கம் எண் :

பக்கம் எண்:278

உரை
 
3. மகத காண்டம்
 
17. இரவெழுந்தது
 
           மலையி னிழிந்து விலைவரம் பறியா
           அருவிலை நன்மணி போத்தந் தவ்வழிப்
           பெருவிலைப் பண்டம் பெய்வது புரிந்து
     125    செழுமணிக் காரர் குழுவினுட் காட்டி
 
                     (இதுவுமது)
              122 - 125 : மலை ......... காட்டி
 
(பொழிப்புரை) சின்னச் சோலை யென்னும் அந்த மலையினின்றும் கீழிறங்கி விலை வரம்பிட்டு அறிய ஒண்ணாத அரிய விலையையுடைய நல்ல மணிகளோடு போய் அப் பகைவர் உள்ளவிடத்து அந்தப் பெரு விலைப் பண்டமாகிய மணிகளை விலைக்குக் கொடுத்தலை விரும்பிக் கொழுவிய மணி வணிகர்களின் கூட்டம் போலத் தம்மைப் பிறர்க்கு அறிவுறுத்திக் கொண்டு; என்க.
 
(விளக்கம்) மலை - சின்னச் சோலையென்னும் மலை. வரம்பு -  எல்லை. அருவி - கொடுத்தற்கரிய விலை. மணியுடன் போதத்தந்து என்க. அவ்வழி - அப் பகைவருள்ள இடத்தில், பெய்வது - விலைக்குக் கொடுத்தல். செழுமணி - -ஒளி முதலியவற்றால் வளமுடைய மணி. மணிக்காரர் - மணி வணிகர். காட்டி - தம்மைப் பிறர் நினைக்கும்படி செய்து.