உரை |
|
3. மகத காண்டம் |
|
17. இரவெழுந்தது |
|
உறுவிலை
கொண்டு பெறுவிலை
பிழையா
வெண்பூந் துகிலுஞ் செம்பூங்
கச்சும்
சுரிகையும் வாளு முருவொடு
புணர்ந்த
அணியின ராகிப் பணிசெயற் குரிய
130 இளையரை யொற்றித் தளைபிணி
யுறீஇப் |
|
(இதுவுமது)
126 - 130 : உறு ......... உறீஇ |
|
(பொழிப்புரை) மிக்க விலையினைக் கொண்டு தாம் பெறுகின்ற விலைக்குக் குறையாத
வெண்பூந்துகிலும் செம்பூங்கச்சும் உடை வாளும் பெரு வாளும் அணிந்த அழகோடு சேர்ந்த
ஒப்பனையையுடையராய் அக் கூட்டத்தில் தொழில் செய்தற்குரிய இளையரை ஆராய்ந்து
நியமித்துக் கொண்டு நன்கு பொருள்களைக் கட்டி; என்க. |
|
(விளக்கம்) உறு - மிகுதி. விலைபிழையா - விலைப்பொருளுக்குக் குறையாத என்க. சுரிகை
- உடைவாள். உரு - வடிவம். வெள்ளைத் துகிலும் செம்பூங்கச்சும் அணிந்துகொண்டு
உடைவாளும், வாளும் கட்டிய இடையினராய் ஆகிய வடிவத்தோடு என்க. ஒற்றி -
ஆராய்ந்துணர்ந்து. தளைபிணியுறீஇ - பொருட்களை நன்றாகக்
கட்டி. |