உரை |
|
3. மகத காண்டம் |
|
2. மகதநாடு புக்கது |
|
பெருவழி
முன்னிப் பெருந்தகை வேந்தனை
உருமண் ணுவாவும் வயந்தக
குமரனும் அருமறை
நாவி னந்த ணாளன்
மயக்கமில் கேள்வி யிசைச்சனு மென்றிக்
5 கடனறி தோழர் காவல் போற்றி
மடநடை மாதர் மாறிப்
பிறந்துழி
மீட்கும் வேட்கையொடு சேட்புலம் போகி
|
|
(தோழர்
செயல்) 1 - 7; பெருவழி.........போகி
|
|
(பொழிப்புரை) இவ்வாறு
மகதநாட்டினகத்தே செல்லுமொரு பெரிய வழிமேற்கொண்டு பெருந்தகைமையுடைய
வேந்தனாகிய உதயணனை அவனுடைய அமைச்சரும் தத்தங் கடமைகளை
நன்குணர்ந்த தோழருமாகிய உருமண்ணுவாவும் வயந்தக குமரனும் அரிய
மறைபயின்ற செந்நாவினையுடைய அந்தணனும் மயக்கமற்ற நூற்கேள்வியையுடையவனும்
ஆகிய இசைச்சனும் காவற்றொழிலை மேற்கொண்டு, மடப்பமமைந்த நடையையுடைய
வாசவதத்தை நல்லாள் மாறிப் பிறந்திருக்குமிடத்தைக்கண்டு அவளைத்
தம்மோடு மீட்டுக் கொணரும் விருப்பத்ததோடேமிகத் தொலைவிலுள்ள
நாட்டிற் சென்று,
|
|
(விளக்கம்) வேந்தன் -
உதயணன். இசைச்சன் - பார்ப்பனத் தோழன். கடன்- தத்தமக்குரிய கடமை.
மாதர்-வாசவதத்தை சேட்புலம் -தொலைவிலுள்ள
|