பக்கம் எண்:281
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 17. இரவெழுந்தது | | முதிர்பழ
மிளகு மெதிர்வது
திகழ்ந்த
மஞ்சளு மிஞ்சியுஞ் செஞ்சிறு
கடுகும்
தலைப்பெருங் காயமு நலத்தகு
சிறப்பிற்
சீரகத் தரிசியு மேலமு மேனைக்
145 காயமு மெல்லா மாய்வன ரடக்கி
| | (உண்
பொருள்கள்)
141 - 145 : முதிர் ......... அடக்கி
| | (பொழிப்புரை) முதிர்ந்த மிளகுப் பழமும், முற்றிய ஒளி திகழ்ந்த மஞ்சளும், இஞ்சியும்,
சிவந்த சிறுகடுகும், சிறந்த பெருங்காயமும், நன்மைமிக்க சிறப்பினையுடைய சீரகத்து
அரிசியும், ஏலமும், பிற காயங்களும், ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்த பைகளில்
அடக்கிக்கொண்டு;என்க
| | (விளக்கம்) முதிர்ந்த பழமாகிய மிளகு என்க. காயம் - கறிக்கிடு பொருள்கள்.
ஆய்வனர் - ஆராய்ந்து.
|
|
|